உலக செய்திகள்

பெரு நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி + "||" + Accident in Peru: 23 killed as bus falls into gorge

பெரு நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி

பெரு நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 23 பேர் பலி
பெரு நாட்டில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் சிக்கி 23 பேர் பலியாயினர்.
லிமா,

பெரு நாட்டின் தெற்கு பகுதியில் குவிஸ்பிகாஞ்சி மாகாணத்தில் உள்ள அமேசான் மழைக்காடு நகரமான புவேர்ட்டோ மால்டோனாடோவில் இருந்து கஸ்கோ நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.

இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கஸ்கோவில் உள்ள மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.


இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையில் இருந்து 300 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிர் இழந்தனர்.

மேலும் சுமார் 20 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானி உடல் மும்பை கொண்டு வரப்பட்டது
கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த விமானியின் உடல் மும்பை கொண்டு வரப்பட்டது. உடலுக்கு விமானிகள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
2. தஞ்சையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பல லட்சம் ரூபாய் பொருட்கள் சேதம்
தஞ்சையில், பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.
3. நெய்வேலி என்.எல்.சி. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
நெய்வேலி என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
4. குஜராத் ரசாயன ஆலையில் விபத்து: பாய்லர் வெடித்து 5 தொழிலாளர்கள் பலி
குஜராத் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.
5. கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது விபத்து: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயம்
கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 8 பேர் காயமடைந்தனர்.