வைரலான ”கோடீஸ்வர பிச்சைக்காரி”


வைரலான ”கோடீஸ்வர பிச்சைக்காரி”
x
தினத்தந்தி 4 Oct 2019 10:50 AM GMT (Updated: 4 Oct 2019 10:50 AM GMT)

லெபனானை சேர்ந்த பிச்சை எடுக்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.6 கோடியே 37 லட்சம் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிடான்,

லெபனானின் மூன்றாவது பெரிய நகரம் சிடான். இங்குள்ள மருத்துவமனை வாசலில் தினமும் பிச்சை எடுத்து வரும் பெண், ஹஜ் வாஃபா முகமது அவாத். மருத்துவமனை ஊழியர்களுக்கு இவரை நன்கு தெரியும் என்பதால் தினமும் பிச்சை போட்டுச் செல்வார்கள். இவர், தான் பிச்சை எடுக்கும் பணத்தை ஜேடிபி என்ற வங்கியில் தினமும் சேமித்து வந்துள்ளார்.

இந்த வங்கி சமீபத்தில் மூடப்பட்டது. இந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் பணத்துக்கு அந்நாட்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் ரியாத் சலாமே உறுதி அளித்திருந்தார். அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை, ஹஜ் வாஃபா முகமது அவாத்துக்கு லெபனான் மத்திய வங்கியில் இருந்து வழங்கிய இரண்டு காசோலைகளின் போட்டோ காப்பி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இருந்த லெபனான் பவுண்ட்டின் இந்திய மதிப்பு, சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம்!

இது பிச்சைக்காரப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட காசோலை என்பது பிறகுதான் தெரிய வந்துள்ளது. வாஃபா கோடீஸ்வரி என்பது, அவருக்கு பிச்சை போடுபவர்களுக்குத் தெரிந்ததை அடுத்து, அவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இதுபற்றி அந்த மருத்துவமனையின் செவிலியர்  ஹனா என்பவர் கூறும்போது:-

வாஃபாவை பிச்சைக்காரி என்றே நினைத்திருந்தோம். கடந்த 10 வருடமாக மருத்துவமனை வாசலில்தான் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரை இந்தப் பகுதியில் எல்லோருக்கும் தெரியும். இப்போது அவர் கோடீஸ்வரி என்ற செய்தி வெளியானதும் டாக் ஆப் தி டவுனாகி இருக்கிறார் என்றார்.

Next Story