உலக செய்திகள்

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை + "||" + Indian businessman abducted and murdered in United States

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை

அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் உள்ள போஷ் கலிபோர்னியாவை சேர்ந்தவர் துஷார் அட்ரே (வயது 50). இந்திய வம்சாவளியை சேர்ந்த கோடீஸ்வரரான இவர் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனி நடத்திவந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இவர் வீட்டில் மேலும் சிலருடன் இருந்தார். அப்போது சந்தேகப்படும் நபர்கள் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அவரது தோழியின் காரில் அவரை கடத்திச் சென்றனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் அவரை தேடிவந்தனர்.


சில மணி நேரத்தில் அந்த கார் அருகில் உள்ள மரங்கள் நிறைந்த மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. காரின் அருகில் துஷார் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை கொலை செய்தது யார்? எதற்காக இந்த கொலை நடந்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். பணத்துக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கண்டனம்
ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்தி வைப்புக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
3. அமெரிக்காவில் நடு வானில் சிறிய ரக விமானங்கள் மோதல்: 7 பேர் பலி
அமெரிக்காவில் நடு வானில் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் 7 பேர் பலியாகினர்.
4. ஆப்பிள், அமேசான், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரி கேள்வி
போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில் அமேசான், கூகுள், ஆப்பிள், பேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் அமெரிக்க நாடாளுமன்ற குழு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
5. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் - டிரம்ப்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரானால் பிற நாடுகளுக்கும் வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார்.