உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி + "||" + Court rejects challenge to Gotabaya Rajapaksa's citizenship

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொழும்பு,

இலங்கை அதிபர் தேர்தல் நவம்பர் 16-ந்தேதி நடக்கிறது. அதில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபய ராஜபக்சே போட்டியிடுகிறார். ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

இதற்கிடையே, அவர் இலங்கை குடிமகன் அல்ல, அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்றும், அவரது இலங்கை குடியுரிமை சான்றிதழ் போலியாக உருவாக்கப்பட்டதாகவும் இலங்கை மேல்முறையீட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. 

இலங்கை அரசியல் சட்டப்படி, அந்நாட்டு குடிமகன் மட்டுமே அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும். கோத்தபய, தேர்தலில் போட்டியிட தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பரிசீலித்த இலங்கை கோர்ட், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதையடுத்து, இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே போட்டியிடுவதில் இருந்த சிக்கல் நீங்கியது.

தொடர்புடைய செய்திகள்

1. இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
2. இலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார் - அமெரிக்க அரசு
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்சேவுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.
3. இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்பு - பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவுக்கு மந்திரிகள் நெருக்கடி
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்றார். பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் விக்ரமசிங்கேவுக்கு மந்திரிகள் நெருக்கடி அளித்துள்ளனர்.
4. அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் இலங்கையில் துப்பாக்கிச்சூடு
இலங்கையின் வடமேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கு மேலும் 15 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.