சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்கலாம்


சவுதி அரேபியாவில் இனி வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்கலாம்
x
தினத்தந்தி 5 Oct 2019 11:20 PM GMT (Updated: 5 Oct 2019 11:20 PM GMT)

சவுதி அரேபியாவில் வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரியாத்,

சவுதி அரேபியாவில் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்து நிற்காமல், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பிற துறைகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த அந்த நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.

அந்த வகையில், 49 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு சுற்றுலா விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அங்குள்ள ஓட்டல்களில் வெளிநாட்டு ஆணும், பெண்ணும் ஒன்றாக ஓட்டலில் தங்குவதற்கு தடை இருந்து வந்தது.

இப்போது அந்த தடையை சவுதி அரேபிய அரசு நீக்கி விட்டது. அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த ஆணும், பெண்ணும் தங்கள் உறவுமுறையை நிரூபிக்க அவசியமின்றி, ஓட்டலில் இனி ஒன்றாக தங்கலாம். இருப்பினும் மது அருந்த அனுமதி இல்லை.

அதே நேரத்தில் உள்நாட்டை சேர்ந்த ஆணும், பெண்ணும் ஓட்டலில் ஒன்றாக தங்க வேண்டும் என்றால் அவர்கள் தங்களிடையேயான உறவை நிரூபிப்பதற்கான ஆதார ஆவணங்களை, அடையாள அட்டைகளை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பெண்கள் தனியாக வந்து ஓட்டல்களில் தங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.


Next Story