ஆப்கானிஸ்தானில் கஜினி பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு; 8 மாணவிகள் காயம்


ஆப்கானிஸ்தானில் கஜினி பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு; 8 மாணவிகள் காயம்
x
தினத்தந்தி 8 Oct 2019 7:28 AM GMT (Updated: 8 Oct 2019 7:28 AM GMT)

ஆப்கானிஸ்தானில் கஜினி பல்கலைக்கழகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 மாணவிகள் காயம் அடைந்துள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அரசுக்கும் இடையே 17 வருடங்களுக்கும் கூடுதலாக போர் நடந்து வருகிறது.  அரசுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டணி படை அந்நாட்டில் செயல்பட்டு வருகிறது.  பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

இதனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், அங்கிருந்து படைகளை வாபஸ் பெறுவதற்காகவும், தலீபான் தீவிரவாதிகளுடன் அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  எனினும், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தும், தீர்வு எதுவும் ஏற்டாத நிலையே உள்ளது.  தொடர்ந்து அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன.

அதேவேளையில், கஜினி நகரில் உள்ள கஜினி பல்கலைக்கழகத்தின் உள்ளே குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது.  இதில் 8 மாணவிகள் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Next Story