காஷ்மீர் பிரச்சினை பற்றி சீனா கருத்து ‘‘இருதரப்பு ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்’’
காஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
பீஜிங்,
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று சீனாவுக்கு சென்றார். இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கெங் சுவாங் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவும், சீனாவும் மேல்மட்டத்தில் தொடர்பு வைத்துக்கொள்ளும் பாரம்பரியம் கொண்ட நாடுகள். உயர்மட்டத்தில் தகவல் பரிமாற்றம் நடந்து வருகிறது. இரு நாடுகளும் வளர்ந்து வரும் பெரிய நாடுகள். இருதரப்பு உறவு நல்லமுறையில் வளர்ச்சி கண்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினை பற்றிய எங்கள் நிலைப்பாடு தெளிவானது. அதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் இருதரப்பு ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அதுதான் இரு நாடுகளுக்கும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.நா. தீர்மானம் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று முன்பு ஒருமுறை சீனா தெரிவித்தது. ஆனால், அந்த நிலைப்பாட்டை தற்போது கைவிட்டு விட்டது.

Related Tags :
Next Story