துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ


துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை - மைக் பாம்பியோ
x
தினத்தந்தி 10 Oct 2019 8:03 AM GMT (Updated: 10 Oct 2019 11:33 AM GMT)

துருக்கி சிரியாவின் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்கவில்லை என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ கூறினார்.

வாஷிங்டன்

வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கா வெளியேறியவுடன்  துருக்கி தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. சிரிய பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு எதிராக அமெரிக்காவுடன்  இணைந்து போராடிய  குர்து  போராளிகளுக்கு எதிராக தனது நீண்டகால திட்டமிடப்பட்ட நடவடிக்கையைத் தொடர டிரம்ப், துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கு அனுமதி கொடுத்தார்.

துருக்கிய விமானங்கள் குர்திஷ் நிலைகளை வான்வழி மற்றும் பீரங்கிகளால் தாக்கின.

குண்டுவெடிப்பினால்  300,000 மக்கள் இடம்பெயரக்கூடும் என்று மனிதாபிமான குழுக்கள் தெரிவித்து உள்ளன. எர்டோகனின் உயர்மட்ட ஆலோசகர்  கிறிஸ்டியன் அமன்பூர் துருக்கி தாக்குதலின் நோக்கம் குறித்து டிரம்ப் முன்கூட்டியே அறிந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிரியாவின் வடக்கு எல்லைப் பகுதியிலிருந்து அமெரிக்க படைகளை  திரும்பப் பெறுவதற்கான ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின்  முடிவு பரவலாக விமர்சிக்கப்பட்ட நிலையில் இந்த  முடிவை பாம்பியோ ஆதரித்து உள்ளார்.

துருக்கிக்கு நியாயமான பாதுகாப்பு அக்கறை மற்றும் அவர்களின் தெற்கு பகுதிக்கு  ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறினார்.

தாக்குதல் நடத்த துருக்கிக்கு  அமெரிக்கா அனுமதி அளித்ததாக வெளியான தகவல்கள் "தவறானவை" என்று அவர் கூறினார். அமெரிக்கா துருக்கிக்கு பச்சை விளக்கு காட்டவில்லை என்று அவர் கூறினார்.

Next Story