பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் இந்து பெண் கடத்தல்; கட்டாய மதமாற்றம்


பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் இந்து பெண் கடத்தல்; கட்டாய மதமாற்றம்
x
தினத்தந்தி 10 Oct 2019 10:16 AM GMT (Updated: 10 Oct 2019 10:16 AM GMT)

பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் இந்து பெண் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இஸ்லாமபாத்,

பாகிஸ்தான் சிந்த் மாகாணத்தில் ஒரு இந்து பெண் பல நபர்களால் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இது போன்ற சம்பவங்கள் சிந்த் மாகாணத்தில் தொடர்ந்து நடந்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ஆம் தேதி சிந்த் மாகாணத்தில் ரோகரி நகரில் இருந்து கல்லூரிக்குச் செல்லும்போது ரெனோ குமாரி என்ற பெண் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக அந்த பெண்ணின் பெற்றோர் புகார் அளித்தனர். ஆகையால், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த பெண் பெற்றோரிடம் சேர்க்கப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும், 12 முதல் 28 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 இளம் இந்து பெண்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று அமெரிக்காவைச் சேர்ந்த சிந்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி இறுதியாண்டு பல் மருத்துவம் படித்து வரும் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் விடுதியில் மர்ம முறையில் கழுத்து இறுக்கப்பட்டு இறந்து கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story