சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது


சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது
x
தினத்தந்தி 11 Oct 2019 10:19 AM GMT (Updated: 11 Oct 2019 10:19 AM GMT)

பாகிஸ்தானில் சவுத்ரி சர்க்கரை ஆலைகள் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் குடும்பத்தினர் மீது சவுத்ரி சர்க்கரை ஆலைகளின் பங்குகளை விற்பது மற்றும் வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதில், நவாஸ் ஷெரீப் நேரடி தொடர்பில் இருந்தார் எனவும் கூறப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பை கைது செய்த லாகூர் போலீசார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணை தலைவரும், நவாஸின் மகளும் ஆன மர்யம், மற்றும் அவரது உறவினர் யூசப் அப்பாஸ் மீது கட்சிக்கு சந்தேகத்திற்கு இடமாக பில்லியன் கணக்கில் பணப்பரிவர்த்தனை நிகழ்ந்ததாக ஆதாரங்களுடன் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்பிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின், உடல்நலக்குறைவை காரணம் காட்டி  அவருக்கு 15 நாட்கள் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கு போலியானது, எந்தவித முகாந்திரமும் இல்லை எனவும், ஒருநாள் கூட கைது செய்து சிறையில் அடைக்கக் கூடாது எனவும் நவாஸ் ஷெரீப்பின் வழக்கறிஞர் வாதிட்டாலும், கோர்ட் அவரது வாதத்தை ஏற்கவில்லை.  இந்நிலையில், நவாஸ் ஷெரீப்  கைது செய்யப்பட்டு லாகூர் பொறுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Next Story