உலக செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான் + "||" + Modi has played his last card by revoking occupied Kashmir's autonomy, PM Imran says

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் -இம்ரான் கான்
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் மோடி தனது கடைசி கார்டையும் பயன்படுத்தி விட்டார் என்று பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.
இஸ்லாமாபாத்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. மேலும் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் அரசு, காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு வகையில் பிரச்சாரம் செய்தது.

காஷ்மீர் பக்கம் சர்வதேச நாடுகளின் கவனம் திரும்பும் என்று எண்ணி,  இம்ரான்கான் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 

முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது குறித்து வெளிப்படையாகவே பேசிய இம்ரான்கான், பிரதமர் நரேந்திரமோடிக்கு அழுத்தம் கொடுக்காத காரணத்தால் சர்வதேச நாடுகள் மீது சிறிது அதிருப்தி அடைந்தார்.

இந்த நிலையில்  இன்று பாகிஸ்தான்  தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக  மனித சங்கிலி போராட்டம்  நடைபெற்றது. இதில்  தொழுகைக்கு பின்னர் ஏரளாமான மக்கள் கலந்து கொண்டனர். இதில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார்.  கூட்டத்தி்ல் இம்ரான்கான்  பேசும் போது கூறியதாவது;-

ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் நாடு அவர்களுடன் நிற்கிறது என்று ஒரு செய்தியை வழங்க இன்று மக்கள் இங்கு கூடி உள்ளனர்.

நரேந்திர மோடி தவறு செய்து விட்டார், அவர் தனது கடைசி கார்டையும் பயனபடுத்தி விட்டார். 370 வது பிரிவை ரத்து செய்வதற்கான முடிவை ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று மோடி நினைத்து பார்க்க வேண்டும். 

கடந்த பல தசாப்தங்களாக காஷ்மீர் மக்கள் எதிர்கொண்டது, அது அவர்களிடையே மரண பயத்தை நீக்கியுள்ளது என்பது அவருக்கு [மோடி] தெரியாது பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் மக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் போது அவர்கள், வெளியே வருவார்கள்.

காஷ்மீரில் 80 லட்சம்  மக்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பதை சர்வதேச சமூகத்திற்கு தொடர்ந்து நினைவுபடுத்துவோம்.

காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை, ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதால் இரட்டை நிலை பிரச்சினையை நான் முன்னிலைப்படுத்த விரும்புகிறேன், ஆனால் ஹாங்காங்கின் பிரச்சினையுடன் ஒப்பிடும்போது காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு விகிதம் மிகக் குறைவு. நமது இயக்கம் காஷ்மீர் மக்களின் மனித உரிமைகளுக்காக; கடவுள் விரும்பினால் அது மிகப்பெரியதாகிவிடும்.