உலக செய்திகள்

லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேருக்கு கத்தி குத்து - சந்தேக நபர் கைது + "||" + Five stabbed at famous shopping centre at London

லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேருக்கு கத்தி குத்து - சந்தேக நபர் கைது

லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேருக்கு கத்தி குத்து - சந்தேக நபர் கைது
லண்டன் பிரபல வணிக வளாகத்தில் 5 பேரை கொடுரமாக கத்தியால் குத்தப்பட்டனர். சந்தேகிக்கும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
லண்டன்,

லண்டன் நகரின் மான்செஸ்டர் பகுதியில் பிரபல வணிக வளாகத்தில் இன்று கலை 11.15 மணியளவில் மர்ம நபர் ஒருவர் 5 பேரை கொடுரமாக கத்தியால் குத்திவிட்டு தப்பிவிட்டார்.

தகவல் அறிந்தவுடன் லண்டன் பயங்கரவாத தடுப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 40 வயது சந்தேக நபரை போலீசார் கைது செய்தனர்.


காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இதே வணிக வளாகத்தில் பயங்கரவாத தற்கொலைப்படை குண்டு வெடிப்பு தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். தற்போது நடைபெற்ற சம்பம் தீவிரவாத செயலாக இருக்கலாம் என்று போலிஸ் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.