உலக செய்திகள்

சிரியாவில் வலுக்கும் மோதல்: துருக்கி-குர்து படைகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் சொல்கிறார் + "||" + The strengthening conflict in Syria: Ready to mediate between Turkish-Kurdish forces - Trump says

சிரியாவில் வலுக்கும் மோதல்: துருக்கி-குர்து படைகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் சொல்கிறார்

சிரியாவில் வலுக்கும் மோதல்: துருக்கி-குர்து படைகள் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் - டிரம்ப் சொல்கிறார்
சிரியாவில் துருக்கி-குர்து படைகள் இடையே வலுத்து வரும் மோதல் தொடர்பாக, மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதியில் குர்து இன போராளிகளை குறிவைத்து துருக்கி ராணுவம் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது. வான்வழியாகவும், தரைவழியாகவும் நடத்தி வரும் அதிரடி தாக்குதல்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதே போல் குர்து இன போராளிகள் நடத்திய பதில் தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர் ஒருவர் பலியானார். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்த மோதல் காரணமாக சிரியாவின் வடக்கு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் கூட்டமாக பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

குர்து போராளிகள் மீதான துருக்கியின் இந்த நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு உடனடியாக சண்டையை நிறுத்தும்படி வலியுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் துருக்கி ராணுவம் மற்றும் குர்து போராளிகள் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்களிடம் 3 வழிகள் உள்ளன. ஒன்று ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்பி ராணுவ ரீதியாக வெல்வது. 2-வது துருக்கி மீது பொருளாதார தடை விதிப்பது. 3-வது துருக்கி மற்றும் குர்து போராளிகள் இடையே மத்தியஸ்தம் செய்வது. இதில் எங்களால் மத்தியஸ்தம் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சிரியாவில் சண்டை நிறுத்தம்: எல்லையில் இருந்து வெளியேறிய குர்துக்கள்
துருக்கியுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின்படி சிரியா வடக்கு எல்லையில் இருந்து குர்து படையினர் வெளியேறினர்.
2. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து துருக்கி சிரியாவில் போர் நிறுத்தம்
குர்துக்களுக்கு எதிராக துருக்கி ராணுவ தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
3. தடை செய்யப்பட்ட ஆயுதங்களை குர்து மக்கள் மீது பயன்படுத்தும் துருக்கி
துருக்கி அரசு உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்கள் மீது பயன்படுத்துவதாக குர்திஷ் படைகள் குற்றம் சாட்டியுள்ளன.
4. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
5. துருக்கி தாக்குதல்: அரசுடன், குர்துகள் ஒப்பந்தம் சிரியா ராணுவம் எல்லையில் குவிப்பு
துருக்கியின் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சிரியா அரசுடன், குர்து போராளிகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளனர்.