உலக செய்திகள்

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி + "||" + Nine Dead, 8 Injured In Collision Between Train, Passenger Bus In Mexico

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதி விபத்து: 9 பேர் பலி
மெக்சிகோவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பஸ் மீது ரெயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.
மெக்சிகோ,

மெக்சிகோவின் குவரிடாரோ மாநிலம்  சான் ஜூவான் டெல் ரியோ நகரில் சென்ற பயணிகள் பஸ் ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ரெயில் அந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு தலைகீழாக கவிழ்ந்தது. இந்த பஸ்சின்  இடிபாடுகளில் பயணிகள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த  போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டிரைவர் உள்ளிட்ட 8 பேர் பலத்த காயமடைந்தனர்.

அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. ரெயில் வருவது தெரிந்தும் பஸ் டிரைவர் தண்டவாளத்தை கடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மெக்சிகோவில் பயங்கரம்: ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 பேர் சாவு
மெக்சிகோவில் ராட்சத ராட்டினத்தில் இருந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர்.
2. மெக்சிகோவில் பயங்கரம்: 44 பேர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை
மெக்சிகோவில் 44 பேர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்து உடல் பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கிணற்றுக்குள் வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. அமெரிக்காவில் ஆற்றில் மூழ்கி இந்திய மாணவர்கள் 2 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அர்லிங்டோன் நகரில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த அஜய்குமார் கோயல்முடி (வயது 23) மற்றும் தேஜா கவுசிக் (22) ஆகிய இருவரும் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வந்தனர்.
4. ஆத்தூர் அருகே, கார் கவிழ்ந்தது: தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் விபத்தில் பலி - தாயார் உள்பட 3 பேர் படுகாயம்
ஆத்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தங்கை திருமணத்திற்கு சென்ற என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். தாயார் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ்தரப்பில் கூறப் பட்டதாவது:-
5. தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பலி 7 பேர் படுகாயம்
தென்னிலை அருகே லாரி மோதியதில் சரக்கு வேனில் சென்ற 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...