உலக செய்திகள்

ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’ + "||" + With a value of Rs 141 crore: gold chappal is made In the Burj Khalifa architectural structure

ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’

ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 24 காரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.
துபாய்,

துபாயில் வசித்து வரும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஆண்டோனியோ விட்ரி என்பவர் இந்த செருப்பை வடிவமைத்து தயாரித்துள்ளார். 30 காரட் வைரங்கள் மற்றும் கடந்த 1579-ம் ஆண்டில் அர்ஜெண்டினாவில் கண்டெடுக்கப்பட்ட விண்கல் ஆகியவைகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

இதன் குதிகால் பகுதியானது துபாயில் இருக்கும் உலகின் உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 1 கோடியே 99 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 141 கோடியே 11 லட்சம் ரூபாய்) ஆகும்.

ஏற்கனவே 1 கோடியே 55 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட செருப்பு கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது. தற்போது துபாயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த தங்க செருப்பு, அதனை முறியடித்து உலகிலேயே அதிக விலையுயர்ந்த செருப்பாக திகழ்கிறது.