இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக குறைத்தது ஐ.எம்.எப்


இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1  சதவீதமாக குறைத்தது ஐ.எம்.எப்
x
தினத்தந்தி 16 Oct 2019 2:45 AM GMT (Updated: 16 Oct 2019 2:45 AM GMT)

இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக குறைத்தது சர்வதேச நாணய நிதியம் குறைத்து கணித்துள்ளது.

வாஷிங்டன்,

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப், 2019-20 ஆம் ஆண்டுக்கான   இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக  குறையும்  என்று கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்த நிலையில், தற்போது 1.2 சதவீதம் குறைத்துள்ளது. 

கடந்த 2018-ல் நாட்டின்  வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக இருந்து கவனிக்கத்தக்கது.  வளர்ச்சி விகிதத்தில் ஏறத்தாழ 1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ள போதிலும், உலகின் வேகமான பொருளாதார நாடு என்ற நிலையை இந்தியா தக்க வைத்துள்ளது.

கார்ப்பரேட் வரி குறைப்பு போன்ற   திட்டங்களால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில்  7 சதவீதமாக இருக்கும் என்றும் பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது.

சீனாவை பொருத்தவரை, 2018-ல், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5.8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் பன்னாட்டு நிதியம்தெரிவித்துள்ளது.

Next Story