இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்


இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல்: இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டனுக்கு இம்ரான்கான் விளக்கம்
x
தினத்தந்தி 16 Oct 2019 5:41 AM GMT (Updated: 16 Oct 2019 5:41 AM GMT)

இந்தியா-பாகிஸ்தான் உறவு சிக்கல் குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.

இஸ்லாமாபாத்

இங்கிலாந்து அரச தம்பதியினர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். "மிகவும் சிக்கலானது" என்று வர்ணிக்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான  உறவு குறித்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டனுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விளக்கமளித்தார்.

அரச தம்பதியினர் நேற்று பிரதமர் இல்லத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேசினர். தம்பதியரை வரவேற்ற கான், இரக்கமும், தொண்டு நிறுவனங்களை ஆதரித்த அர்ப்பணிப்பு காரணமாக இளவரசி டயானா மீது பாகிஸ்தான் மக்களிடையே இருந்த அன்பையும் பாசத்தையும் நினைவு கூர்ந்தார். அங்கு விருந்தினர்களுக்கு மதிய விருந்து வழங்கப்பட்டது.

காலநிலை மாற்றம், சமத்துவமின்மை மற்றும் கல்வி போன்ற நவீன உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அரச தம்பதியினரை இம்ரான்கான் பாராட்டினார்.

ஆகஸ்ட் மாதம் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததும், ஆப்கானிஸ்தானில் நல்லிணக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவுடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு முன்னுரிமைகள் மற்றும் வெளிசூழல் குறித்த பாகிஸ்தானின் முன்னோக்கு ஆகியவற்றை இம்ரான்கான் விளக்கினார்.

Next Story