குர்துக்கள் "தேவதூதர்கள் அல்ல" அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்


குர்துக்கள் தேவதூதர்கள் அல்ல அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 17 Oct 2019 5:57 AM GMT (Updated: 17 Oct 2019 5:57 AM GMT)

சிரியா விவகாரத்தில் குர்துக்களுக்கு உதவி செய்ய, அவர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல என்று டிரம்ப் விமர்சித்துள்ளார்.

வாஷிங்டன்

சிரியாவில் பல பகுதிகளைக் கைப்பற்றியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதற்காக வடக்குப் பகுதியில் இருந்த குர்துக்களுடன் கைகோர்த்த அமெரிக்கா,  அங்கிருந்து வெளியேறும் முடிவை அறிவித்தது. இதை தொடர்ந்து  குர்துக்கள் தனிநாடு கோரிக்கையால் பாதிக்கப்படுவதாகக் கூறி துருக்கி  குர்துக்கள் மீது போர் தொடுத்துள்ளது. இதனால் 4 லட்சம் குர்துக்கள் இடம்பெயர்ந்து உள்ளனர்.

சிரியாவிலிருந்து தனது படைகளைத் திரும்பப் பெற்றதற்காக அமெரிக்கா கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது.

பல ஆண்டுகளாக தங்களுடன் இணைந்து போர் நடத்திய அமெரிக்கா உதவி செய்யும் என்று நினைத்திருந்த குர்துக்களின் நம்பிக்கை தற்போது தகர்ந்துள்ளது.

சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகியதைக் கண்டித்து அமெரிக்க பிரதிநிதிகள் சபை வாக்களித்தது, ஜனநாயகக் கட்சியினரும் டிரம்பின் சக குடியரசுக் கட்சியினரும் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த  டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

துருக்கி-சிரியா எங்கள் எல்லை அல்ல, இதற்கு மேல் நாங்கள் உயிர்களை இழக்கக்கூடாது.நாங்கள் நாடு திரும்ப வேண்டிய நேரம் இது. நாங்கள் பாதுகாப்பு முகவர்கள் அல்ல. குர்துக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வார்கள். அவர்கள் ஒன்றும் தேவதூதர்கள் அல்ல.

துருக்கியில் குர்திஷ்கள் தனிநாடுகேட்டு போராடும் ஒரு கிளர்ச்சிக் குழு. குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) - "இஸ்லாமிய அரசை விட பயங்கரவாதத்தை விடவும் பல வழிகளில் பயங்கரவாத அச்சுறுத்தலாகவும் இருக்கலாம் என கூறினார்.

டிரம்பின் இந்தப் பேச்சு குர்துக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் பாதுகாப்பு மண்டலத்தில் இருந்து குர்துக்கள் விலகினால் உடனடியாக போரை நிறுத்திக் கொள்ளவும் தயார் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

Next Story