உலக செய்திகள்

யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை + "||" + After 36 years of service in SriLanka yazpanam

யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை

யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை
இலங்கை யாழ்ப்பாணத்தில் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது.
கொழும்பு,

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. காலை 8 .55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

விமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 16 போ் மட்டுமே  பயணித்தனர். 36 ஆண்டுகளுக்கு பின் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை வரவேற்கும் விதமாக ஓடுதளத்தில் இரண்டு புறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

முதல்கட்டமாக, மதுரை, கோவை, திருச்சி, சென்னை, மும்பை, திருவனந்தபுரம் நகரங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமானம் இயக்கப்பட உள்ளது. 

இலங்கையில் 1983 ல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டது. பலாலியில் உள்ள விமான தளம், தற்போது புதுப்பிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.