அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து துருக்கி சிரியாவில் போர் நிறுத்தம்


அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து துருக்கி சிரியாவில்  போர் நிறுத்தம்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:56 AM GMT (Updated: 18 Oct 2019 4:56 AM GMT)

குர்துக்களுக்கு எதிராக துருக்கி ராணுவ தாக்குதல் நடத்தியது. அமெரிக்கா பேச்சுவார்த்தையை தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்

சிரியாவின் வடகிழக்கே வசிக்கும் குர்துக்களுக்கு எதிராக துருக்கி கடந்த 9 நாட்களாக சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் லட்சத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். சிரியாவில் மட்டும் 72 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், அங்காராவில் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸூம், துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகனும் நடத்திய சந்திப்புக்கு பின்னர் இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஐந்து நாட்கள் சண்டை நிறுத்தப்படும். இந்நேரத்தில் துருக்கி எல்லையில் அமைப்பதாக கூறும் "பாதுகாப்பு மண்டலம்" என்கிற பகுதியில் இருந்து குர்துக்கள் தலைமையிலான துருப்புகளை பின்வாங்குவதற்கு அமெரிக்கா உதவும்.

இந்த ஒப்பந்தத்திற்கு குர்து ஒய்பிஜி என்ற பாதுகாப்பு  படை கட்டுப்பட்டு நடக்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.

இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னரும் ராஸ் அல்-அயினில் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இங்கிலாந்தை  தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

Next Story