பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை


பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 9:55 AM GMT (Updated: 18 Oct 2019 9:55 AM GMT)

பாகிஸ்தானுக்கு பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு இறுதி எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இஸ்லாமாபாத்

பாகிஸ்தான் பிப்ரவரி மாதத்திற்குள் பயங்கரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழு பாகிஸ்தானுக்கு இறுதி கெடு விதித்து உள்ளது.

பாகிஸ்தான் ஜூன் 2018-ல் கண்காணிப்புக் குழுவால் கருப்பு பட்டியலில்  வைக்கப்பட்டது. மேலும் 27-புள்ளி செயல் திட்டத்தை செயல்படுத்த 15 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த செயல் திட்டம்  தோல்வியுற்றது, இதை தொடர்ந்து பாகிஸ்தான் கருப்பு பட்டியலில் இடம்பெறுகிறது.

பயங்கரவாத நிதி கண்காணிப்பு குழுவான நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) பிப்ரவரி 2020-க்குள் தனது முழு செயல் திட்டத்தை விரைவாக முடிக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளது. முழுமையான திட்டத்தின் மூலம் பாகிஸ்தானால் அதன் செயல்திட்டத்தில் முழு அளவிலும்  குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றம் செய்யப்படாவிட்டால் கண்காணிப்பு குழு  நடவடிக்கை எடுக்கும் என கூறி உள்ளது.

பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கத் தவறினால், பாகிஸ்தானுடனான வணிக உறவுகள் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துமாறு தங்கள் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குமாறு கண்காணிப்பு உறுப்பு நாடுகள் வலியுறுத்தி உள்ளன.

கண்காணிப்புக் குழு விதிகளின்படி, ''சாம்பல்'' மற்றும் ''கருப்பு''  பட்டியல்களுக்கு இடையில் ஒரு மாறுபாடு நிலை உள்ளது, இது ''இருண்ட சாம்பல்'' என்று குறிப்பிடப்படுகிறது. இது ஒரு வலுவான எச்சரிக்கையை வெளியிடுவதால், சம்பந்தப்பட்ட நாடு தங்களை மேம்படுத்த ஒரு கடைசி வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

''டார்க் கிரே'' என்பது 3-வது கட்டம் வரை எச்சரிக்கைக்கு பயன்படுத்தப்படுவது.   இப்போது பாகிஸ்தானுக்கு விடப்பட்டு இருக்கும் எச்சரிக்கை  4-வது கட்டமாகும்.

Next Story