இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா விருப்பம்


இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும்: சீனா விருப்பம்
x
தினத்தந்தி 19 Oct 2019 3:23 AM GMT (Updated: 19 Oct 2019 4:25 AM GMT)

இந்தியாவும் பாகிஸ்தானும் நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்ததையடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக கடுமையான பகையுணர்வை காட்டி வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தணிந்த பாடில்லை. 

இந்த சூழலில், இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து நல்லுறவுடன் செயல்பட வேண்டும் என்று சீனா தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான சீன தூதர், சுன் வெய்டாங் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். 

சீன தூதர் சுன் வெய்டாங் மேலும் கூறுகையில், “ சீனாவும் இந்தியாவும் பிராந்தியத்தில் செல்வாக்குடன் விளங்கும் மிகப்பெரிய நாடுகள் ஆகும்.  இந்தியா -  சீனா மட்டும் இல்லாது இந்தியா  - பாகிஸ்தான் இடையேயும் நல்ல உறவு தொடர வேண்டும் என்று சீனா விரும்புகிறது. 

பிராந்தியத்தில் உள்ள நாடுகள் கைகோர்த்து அமைதி மற்றும் ஸ்திரதன்மை, வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார். 

Next Story