செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்


செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்தன: ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 19 Oct 2019 7:49 AM GMT (Updated: 19 Oct 2019 10:26 AM GMT)

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பூமியில் இருந்ததைப் போன்ற உப்பு ஏரிகள் இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின்  டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நேச்சர் ஜியோசைன்ஸ் இதழில் வெளியிடப்பட்ட  கட்டுரையில்  கூறி இருப்பதாவது

செவ்வாய்கிரகத்தில்  3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கேல் க்ரேட்டர் பள்ளத்தில் உள்ள இருந்த ஏரி, 95 மைல் அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான பாறைப் படுகை, இது 2012 முதல் நாசா கியூரியாசிட்டி ரோவர் மூலம் ஆராயப்பட்டு வருகிறது. சுமார் 3.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கல் தாக்கியபோது கேல் பள்ளம் உருவானது.

செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் உப்பு ஏரிகள் இருந்துள்ளன.  அவை பூமியில் இருந்ததைப் போலவே ஈரமான மற்றும் வறண்ட கட்டங்களைக் கடந்து வந்துள்ளன. கிரகத்தின் காலநிலை நீண்ட காலமாக ‘வறண்டு போய் இருக்கிறது.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலம் மெல்லியதாக மாறியதால் செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் நிலைத்திருக்காமல் ஆவியாகியது என கூறி உள்ளது.

டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வின் இணை ஆசிரியர் மரியன் நாச்சன்  கூறும்போது,

புவியியல் நிலப்பரப்புகள் செவ்வாய் கிரகத்தின் வரலாற்றைப் பதிவு செய்துள்ளன, மேலும் ஆய்வுகள் கேல் க்ரேட்டர் அதன் வரலாற்றில் திரவ நீர் இருந்ததற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது, இது நமக்குத் தெரிந்த நுண்ணுயிர் வாழ்வின் முக்கிய அங்கமாகும், வறண்ட  காலங்களில் உப்பு ஏரிகள் இறுதியில் உருவாகின.

இந்த ஏரிகள் எவ்வளவு பெரியவை என்று சரியாகச் சொல்வது கடினம், ஆனால் கேல் க்ரேட்டரில் உள்ள ஏரி நீண்ட காலமாக இருந்தது - குறைந்தது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முதல் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரை இருந்துள்ளன என கூறினார்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு ஏரிகள்  போல் பொலிவியா-பெரு எல்லைக்கு அருகிலுள்ள அல்டிபிளானோ எனப்படும் பகுதியில் காணப்படுகிறது  என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் காலநிலை இதேபோல் ஈரமான மற்றும் உலர்ந்த காலங்களுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.

இது குறித்து ஆய்வின் இணை ஆசிரியர் மரியன் நாச்சன் கூறியதாவது 

அல்டிபிளானோ ஒரு வறண்ட, உயரமான பீடபூமி ஆகும், அங்கு மலைத்தொடர்களில் இருந்து வரும்  ஆறுகள் மற்றும் நீரோடைகள் கடலுக்கு செல்லவில்லை. ஆனால் செவ்வாய் கிரகத்தில் கேல் பள்ளத்தில் நடந்ததைப் போலவே மூடிய படுகைகளுக்கு இட்டுச் செல்கின்றன.

இந்த நீர்நிலை காலநிலைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நீர் மட்டங்களைக் கொண்ட ஏரிகளை உருவாக்குகிறது. வறண்ட காலங்களில் ஆல்டிபிளானோ ஏரிகள் ஆவியாதல் காரணமாக மேலோட்டமாக வறண்டு போகிறது. மேலும் சில முற்றிலும் வறண்டு போகின்றன என கூறினார்.

Next Story