பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு: அமெரிக்கா கவலை


பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடு: அமெரிக்கா கவலை
x
தினத்தந்தி 19 Oct 2019 7:56 AM GMT (Updated: 19 Oct 2019 10:39 AM GMT)

பாகிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது கவலை அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் ஸ்டீவன் பட்லரை பாகிஸ்தானுக்குள் அனுமதிக்க முடியாது என்று அந்நாடு திருப்பி அனுப்பியதற்கு அமெரிக்கா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. 

மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக,  பாகிஸ்தான் வந்த ஸ்டீவன் பட்லரை லாகூர் சர்வதேச விமான நிலையத்தில், தடுத்து நிறுத்திய பாகிஸ்தான் அதிகாரிகள், உரிய விசா இருந்தாலும், உங்கள் பெயர் தடுக்கப்பட வேண்டிய நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதால், உங்களை அனுமதிக்க முடியாது என்று திருப்பி அனுப்பினர்.  

 பட்லருக்கு அனுமதி மறுக்கப்பட்டதை பாகிஸ்தான் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பொறுப்பு துணை செயலர் அலைஸ் வெல்ஸ் வலியுறுத்தியுள்ளார். 

அலைஸ் வெல்ஸ் தனது டுவிட்டரில் இது பற்றி கூறும் போது, பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கும் கட்டுப்பாடு கவலையளிக்கிறது.  சுதந்திரமான, தன்னிச்சையான ஊடகம் எந்த ஒரு ஜனநாயக நாட்டிற்கும் இன்றியமையாதது. எனவே, பாகிஸ்தான் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்றார். 

Next Story