உலக செய்திகள்

இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை + "||" + Milton Keynes stabbings: Two teenagers killed at house party

இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை

இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை
இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.
லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு ஆடல் பாடல் என மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர்.


நள்ளிரவை தாண்டியும் விருந்து நிகழ்ச்சி தொடர்ந்ததாக தெரிகிறது. அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் விருந்து நடந்த வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் 17 வயதான 2 சிறுவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். மேலும் இளைஞர்கள் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இரு தரப்பினரிடையிலான முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். எனினும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம்: பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
ஹாங்காங்கில் சீனா பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றினால், இங்கிலாந்து குடியேற்ற விதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
2. இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39,369 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனோ வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 39,369 ஆக அதிகரித்துள்ளது.
3. இங்கிலாந்தில் கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆயிரத்தை கடந்தது
இங்கிலாந்தில் கொரோனோ தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 39 ஆயிரத்தை கடந்துள்ளது.
4. ‘இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து’ - விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்தினால் ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
5. 30 லட்சம் ஹாங்காங் குடிமக்களுக்கு குடியுரிமை வழங்க இங்கிலாந்து திட்டம் ; சீனா கோபம்
ஹாங்காகங்கில் உள்ள 30 லட்சம் குடிமக்களுக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. இதனால் சீனா கோபம் கொண்டுள்ளது.