உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு + "||" + EU observers to monitor Lanka's presidential poll

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு

இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்கிறது ஐரோப்பிய யூனியன் குழு
அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியனின் மேற்பார்வையாளர்கள் குழு கடந்த 11 ஆம் தேதி இலங்கை சென்றுள்ளது.
கொழும்பு, 

இலங்கையில் வரும் நவம்பர் 16 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் ஆளும் கட்சியின் தலைவர் சஜித் பிரமதேசாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.  

இலங்கை அதிபர் தேர்தலில் மொத்தம் 35 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். 15 மில்லியன் வாக்களர்கள், வாக்களித்து தங்கள் நாட்டு அதிபரை தேர்வு செய்ய உள்ளனர்.  

இந்த நிலையில், இலங்கை அதிபர் தேர்தலை கண்காணிக்க ஐரோப்பிய யூனியன் குழுவினர் கடந்த 11 ஆம் தேதி அந்நாட்டுக்கு சென்றுள்ளனர். ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் உறுப்பினரான போர்சுகலைச்சேர்ந்த மரிசா மதியாஸ் இக்கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை தேர்தலை 6–வது முறையாக ஐரோப்பிய யூனியன் குழு கண்காணிக்கிறது. ‘‘இந்த வாய்ப்பு கிடைத்தது மிகவும் பெருமைக்குரியது’’ என்று தலைமை மேற்பார்வையாளர் மாரிசா மதியாஸ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. 47 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது
நீண்ட இழுபறிக்கு பின் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.
2. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி
ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலில் அஷ்ரப் கனி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
3. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விபரங்களை இங்கிலாந்து பிரதமர் வெளியிட்டார்
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள முழு விவரங்களை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.
4. இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுமதி
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட கோத்தபய ராஜபக்சேவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.