காஷ்மீரில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உலக பத்திரிகைகளால் கவனிக்கப்படவில்லை - மூத்த பத்திரிகையாளர்


காஷ்மீரில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும் பயங்கரவாதம் உலக பத்திரிகைகளால் கவனிக்கப்படவில்லை - மூத்த பத்திரிகையாளர்
x
தினத்தந்தி 23 Oct 2019 6:46 AM GMT (Updated: 23 Oct 2019 6:46 AM GMT)

காஷ்மீரில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும் 30 ஆண்டுகால இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பயங்கரவாதம் உலக பத்திரிகைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு கவனிக்கப்படவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன், 

'தெற்காசியாவில் மனித உரிமைகள்' தொடர்பான அமெரிக்க மாளிகை வெளியுறவுக் குழு விசாரணையில் காஷ்மீரைச் சேர்ந்த மூத்த இந்திய பத்திரிகையாளர் ஆர்த்தி டிக்கூ சிங்  இடம் பெற்று உள்ளார்.

ஆர்த்தி டிக்கூ சிங் கூறியதாவது:-

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி பேசுவது தார்மீகக் கடமை என்று உணரும் மனித உரிமை ஆர்வலர்கள்  மற்றும் பத்திரிகைகள் உலகில் இல்லை.

காஷ்மீரில் பாகிஸ்தானால் நிகழ்த்தப்படும்  30 ஆண்டுகால இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பயங்கரவாதம் உலக பத்திரிகைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு கவனிக்கப்படவில்லை.

அவர்கள் (பயங்கரவாதிகள்) அவரை (சுஜாத் புகாரி) ஏன் கொன்றார்கள்? காஷ்மீரில் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை முடிவுக்கு கொண்டுவர சுஜாத் புகாரி விரும்பினார். அவர் அமைதியை விரும்பியதால் பாகிஸ்தான்  அவரைக் கொன்றது என கூறினார்.

ஸ்ரீநகரில்  ஜூன் 14,  2018 அன்று, மும்பை பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான  லஷ்கர்-இ-தொய்பா அமைப்பால் சுஜாத் புகாரி சுட்டுக் கொல்லப்பட்டார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் அமெரிக்க உதவி செயலாளர் ஆலிஸ் ஜி வெல்ஸ் பாகிஸ்தானுக்கு நேற்று  கடும் கண்டனம் தெரிவித்தார்.  தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் பேச்சுவார்த்தைக்கு முக்கிய தடையாக  உள்ளனர்.

சிம்லா ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவளித்தாலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதால் பயங்கரவாத தலைவர்கள் தடையாக உள்ளனர் என தெரிவித்து இருந்தார்.

Next Story