மெக்சிகோவில் 2 போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - 9 பேர் பலி


மெக்சிகோவில் 2 போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் - 9 பேர் பலி
x
தினத்தந்தி 24 Oct 2019 10:45 PM GMT (Updated: 24 Oct 2019 9:56 PM GMT)

மெக்சிகோவின் 2 போதைப்பொருள் கும்பல் இடையே நடந்த மோதலில் 9 பேர் பலியாகினர்.


* மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள குய்ரெரோ மாகாணத்தில் 2 போதைப்பொருள் கும்பல் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதில் 9 பேர் பலியாகினர்.

* ஏமனில் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டு போரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், சுமார் 5 லட்சம் சிறுவர்கள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் யுனிசெப் தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் ஊழல் வழக்கில் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நேற்று முன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது தந்தை நவாஸ் ஷெரீப் அனுமதிக்கப்பட்டு உள்ள அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் நேற்று அதிகாலை மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

* மெக்சிகோவின் மிச்சோகன் மாகாணத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்று, விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.


Next Story