உலக செய்திகள்

சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள் + "||" + 'Panda dog' cafe sparks China animal rights debate

சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்

சீனாவில் கவனம் ஈர்க்கும் ‘பாண்டா’ நாய்குட்டிகள்
சீனாவில் வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் ‘பாண்டா’ நாய்குட்டிகள் பவரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
பீஜிங்,

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்டு நகரில் வளர்ப்பு பிராணிகள் நிலையம் உள்ளது. இங்கு அந்த நாட்டின் தேசிய விலங்கான பாண்டா கரடிகள் ஏராளமாக வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் இந்த வளர்ப்பு பிராணிகள் நிலையத்தில் பாண்டா கரடிகளை போன்ற உடல்வாகு கொண்ட நாய் குட்டிகளை கொண்டு வந்து, அவற்றின் உடலில் வெள்ளை மற்றும் கருப்பு வண்ணம் பூசி அச்சு அசலாக பாண்டா கரடிகள் போலவே மாற்றி இருக்கிறார்கள்.

இந்த ‘பாண்டா’ நாய்குட்டிகளின் படங்களையும், வீடியோவையும் வளர்ப்பு பிராணிகள் நிலையம் இணையத்தில் வெளியிட்டது. இது மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் வளர்ப்பு பிராணிகள் நிலையத்துக்கு வந்து, பாண்டா நாய்குட்டிகளை பார்த்து செல்கின்றனர். ‘பாண்டா’ நாய்குட்டிகள் ஒரு தரப்பு மக்களிடம் வரவேற்பை பெற்றாலும், விலங்குகள் நல ஆர்வலர்கள் வளர்ப்பு பிராணிகள் நிலையத்தின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். வண்ணம் பூசுவது நாயின் முடி மற்றும் தோலுக்கு தீங்கு விளைவிக்கும் என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் கட்டுக்குள் வரும் கொரோனா: உகான் நகரில் கட்டுப்பாடுகள் தளர்வு
கொரோனா வைரசின் பிறப்பிடமான உகான் நகரில் பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் தளர்த்தப்படுகிறது.
2. சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சீனா மீது எனக்கு சிறிய வருத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
சீனா மீது எனக்கு சிறிய வருத்தம் உள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
4. சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
சீனாவில் 3 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
5. இத்தாலியில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா; ஒரே நாளில் 793 பேர் பலி
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர்.