பிரேசிலுக்கு இந்தியர்கள் விசா இன்றி வரலாம் - பிரேசில் அதிபர் அறிவிப்பு


பிரேசிலுக்கு இந்தியர்கள் விசா இன்றி வரலாம் - பிரேசில் அதிபர் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Oct 2019 5:58 AM GMT (Updated: 25 Oct 2019 5:58 AM GMT)

பிரேசிலுக்கு இந்தியர்கள் விசா இன்றி வரலாம் என்று பிரேசில் அதிபர் அறிவித்துள்ளார்.

சாபோலா, 

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்நாட்டின் அதிபராக நிகழாண்டு துவக்கத்தில் போல்சோனரா அந்நாட்டு அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வலது சாரி அரசியல்வாதியான போல்சோனரா தான் பதவியேற்றதும்,  சில வளர்ந்த நாடுகளில் இருந்து  பிரேசில் வருபவர்களுக்கு விசா சலுகை அளிக்கப்போவதாக கூறியிருந்தார்.  

அதன்படி, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழில் பிரமுகர்களுக்கு விசா தேவையில்லை என்று  அறிவிப்பு வெளியாகி இருந்தது.  

இந்த நிலையில், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் தொழில் பிரமுகர்கள் விசா இன்றி இனி பிரேசில் வரலாம் என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். சமீபத்தில், சீனாவுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது, சீனர்களுக்கும் விசா சலுகையை போல்சோனரா அறிவித்து இருந்தார்.

Next Story