நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு


நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு
x
தினத்தந்தி 25 Oct 2019 6:16 AM GMT (Updated: 25 Oct 2019 6:16 AM GMT)

நியூசிலாந்தில் 5.9 ரிக்டர் அளவுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

வெல்லிங்டன்,

நியூசிலாந்தில் இன்று காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகியுள்ளது.

சுமார் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பசிபிக் பெருங்கடலின் ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளது. இப்பகுதியில் பல நிலத்தட்டுகள் அமைந்துள்ளன. இந்தத் தட்டுகள் நகர்வதால் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன.

Next Story