ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது


ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது
x
தினத்தந்தி 28 Oct 2019 10:28 AM GMT (Updated: 28 Oct 2019 10:28 AM GMT)

ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்தது. இதனை ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்து உள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வெளியேறும் ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு 3 நாட்களில் கையெழுத்திடுவதற்கான  திட்டத்தை நாடாளுமன்றம் நிராகரித்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஒப்பந்தத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,  அதற்கு எதிராக வாக்களித்து விட்டதால் பிரெக்சிட்டை முன்னெடுத்து செல்வதில் குழப்பம் ஏற்பட்டது.

போரிஸ் ஜான்சன் தனது ஒப்பந்தத்திற்கு ஆதரவைப் பெறத் தவறியதால், மூன்று மாத கால நீட்டிப்பு கேட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். ஆனால் அதில் கையெழுத்திடவில்லை.

தற்போது ஜனவரி 31 வரை பிரெக்சிட் நீட்டிப்பை ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் திங்களன்று இங்கிலாந்தின்  பிரெக்சிட் நீட்டிப்பை   மூன்று மாதங்கள் வரை (ஜனவரி 31 வரை) ஒத்திவைக்க ஒப்புக் கொண்டன.

ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

"ஜனவரி 31, 2020 வரை  பிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான இங்கிலாந்து கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக EU27 ஒப்புக் கொண்டுள்ளது. எழுத்துப்பூர்வ நடைமுறை மூலம்  இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கூறி உள்ளார்.

Next Story