உலக செய்திகள்

அமெரிக்காவில் இரவு நேர விருந்தில் துப்பாக்கி சூடு; 2 மாணவர்களை கொன்றவர் கைது + "||" + United States Firing at the dinner party Arrested for killing 2 students

அமெரிக்காவில் இரவு நேர விருந்தில் துப்பாக்கி சூடு; 2 மாணவர்களை கொன்றவர் கைது

அமெரிக்காவில் இரவு நேர விருந்தில் துப்பாக்கி சூடு; 2 மாணவர்களை கொன்றவர் கைது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள், கடந்த சனிக்கிழமை இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
வாஷிங்டன்,

கிரின்வில்லே நகரில் சுமார் 750 பேர் உற்சாகமாக இந்த நிகழ்ச்சியை கொண்டாடிக்கொண்டிருந்தபோது, அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர், கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார்.

இந்த துப்பாக்கி சூட்டில் மாணவர்களான கெவின் பெர்ரி (வயது 23), பைரன் கிராவன் (23) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.


இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் 2 பேரை சுட்டுக்கொன்ற கிரின்வில்லேவை சேர்ந்த பிராண்டன் ரே கோன்சலஸ் (23) என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட திட்டம்
அமெரிக்காவில் நவம்பர் 1-ந் தேதிக்குள் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி உள்ளது.
2. அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம்: 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு
அமெரிக்காவில் பள்ளிகளை திறக்க டிரம்ப் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக 12½ கோடி முக கவசங்கள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.