உலக செய்திகள்

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி + "||" + 3 dead in Los Angeles Halloween party shooting

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு; 3 பேர் பலி
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலோவீன் நிகழ்ச்சி ஒன்றில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவில் ஹாலோவீன் நிகழ்ச்சியானது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 31ந்தேதி கொண்டாடப்படும்.  அன்றைய தினம் விடுமுறை விடப்படும்.  இந்நிகழ்ச்சியில், பூசணிக்காய்களை பயன்படுத்தி அதில், ஓவியம் வரைவது, பல்வேறு வடிவங்களை உருவாக்குவது போன்றவை மேற்கொள்ளப்படும்.  கப் கேக்குகள், கேண்டிகள், ஆப்பிள்கள் போன்றவையும் பயன்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில் பேய் விரட்டுவதற்காக அதனை போன்று முகமூடிகளை அணிந்து கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தெற்கே ஹாலோவீன் நிகழ்ச்சி ஒன்று நேற்றிரவு நடந்துள்ளது.  திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் தீயணைப்பு துறையால் மீட்கப்பட்டனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு சென்று உள்ளனர்.

இதில், சிகிச்சை பலனின்றி 3 ஆண்கள் உயிரிழந்தனர்.  மீதமுள்ள 9 பேரை உள்ளூர் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவிப்பு
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
2. ஆப்கானிஸ்தானில் கவர்னர் பாதுகாப்பு வாகனம் மீது துப்பாக்கி சூடு; பாதுகாவலர் பலி
ஆப்கானிஸ்தானில் கவர்னருடன் சென்ற பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் பாதுகாவலர் ஒருவர் கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு; இந்திய ராணுவ வீரர் உயிரிழப்பு
காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
4. இந்திய - நேபாள எல்லையில் பதற்றம் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் பலி
இந்திய - நேபாள எல்லையில் துப்பாக்கி சூட்டில் இந்திய பெண் பலியானதால் அங்கு பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
5. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; 2 பேர் பலி
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 2 பேர் பலியாகினர்.