உலக செய்திகள்

சீக்கிய மத நிறுவனர் குருநானக் நினைவு நாணயம்; பாகிஸ்தான் வெளியிட்டது + "||" + Commemorative coin of Sikh religious founder Gurunanak; Published by Pakistan

சீக்கிய மத நிறுவனர் குருநானக் நினைவு நாணயம்; பாகிஸ்தான் வெளியிட்டது

சீக்கிய மத நிறுவனர் குருநானக் நினைவு நாணயம்; பாகிஸ்தான் வெளியிட்டது
சீக்கிய மத நிறுவனர் குருநானக்கின் நினைவு நாணயத்தை பாகிஸ்தான் வெளியிட்டது.
இஸ்லாமாபாத்,

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 550-வது பிறந்த ஆண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு நாணயத்தை பாகிஸ்தான் நேற்று வெளியிட்டது. அந்த நாணயத்தின் புகைப்படத்தை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.


பாகிஸ்தானில் குருநானக் நினைவிடம் அமைந்துள்ள இடத்துக்கு சீக்கியர்கள் செல்வதற்காக போடப்பட்ட கர்தார்பூர் பாதையை இம்ரான் கான் 9-ந் தேதி திறந்துவைக்கிறார். அதற்கு முன்பாக இந்த நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.