உலக செய்திகள்

ஜிம்பாப்வேயில் முதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய பள்ளி மாணவி + "||" + A schoolgirl who saved her friend from being the number one in Zimbabwe

ஜிம்பாப்வேயில் முதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய பள்ளி மாணவி

ஜிம்பாப்வேயில் முதலையிடம் இருந்து தோழியை காப்பாற்றிய பள்ளி மாணவி
ஜிம்பாப்வேயில் முதலையிடம் இருந்து தோழியை பள்ளி மாணவி ஒருவர் காப்பாற்றினார்.
ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டில் சின்டரெல்லா என்ற கிராமத்தில் ஒரு நீச்சல் குளம் உள்ளது. அங்கு ரெபேக்கா என்ற சிறுமி, தனது பள்ளித் தோழிகளுடன் நீந்திக்குளிக்க சென்றாள். எல்லோரும் ஆனந்தமாக நீந்திக்குளித்துக் கொண்டிருந்தனர்.


அப்போது லட்டோயா முவானி என்ற 9 வயது சிறுமி, திடீரென அலறினாள். எதற்காக அந்த சிறுமி அலறுகிறாள் என்று தோழி ரெபேக்கா ஏறிட்டு பார்த்தபோதுதான் அந்த சிறுமி ஒரு முதலையின் பிடியில் சிக்கி இருக்கிறாள் என்பது தெரிய வந்தது. அப்போது சற்றும் தயங்காமல் ரெபேக்கா அந்த முதலையின் முதுகின்மீது பாய்ந்து ஏறி, அதன் கண்களை மூடி தாக்குதல் நடத்தி தோழியை விடுவித்து அவளும் தப்பினாள்.

இது பற்றி ரெபேக்கா கூறும்போது, “முதலையின் தாக்குதலில் எனது தோழி லட்டோயா அலறியபோது நான் தவித்துப்போனேன். அத்தனை பேரிலும் நான்தான் பெரியவள். எனவே நான் முதலையின் முதுகின் மீது பாய்ந்து அதன் பிடியில் இருந்த என் தோழியை விடுவித்தேன். முதலையும் தண்ணீருக்குள் சென்று விட்டது” என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து லட்டோயா உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டாள். அங்கு முதலையின் பிடியில் அவளுக்கு ஏற்பட்ட சிறிய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரெபேக்காவின் துணிச்சலை சக தோழிகள் பாராட்டினர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜிம்பாப்வேயில் கடுமையான வறட்சி: 200 யானைகள் பலி
ஜிம்பாப்வேயில் நிலவும் கடுமையான வறட்சியால், அந்நாட்டில் உள்ள வாங்கே தேசிய பூங்காவில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்தன.
2. ஜிம்பாப்வேயில் சோகம்: பசி, பட்டினியால் 55 யானைகள் சாவு
ஜிம்பாப்வேயில் பசி, பட்டினியால் 55 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது.
3. ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் உடல் ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம்
ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபேயின் உடலை ஹராரேவில் உள்ள வீரர்கள் நினைவிடத்தில் அடக்கம் செய்ய அவருடைய குடும்பத்தினர் சம்மதித்துள்ளனர்.