உலக செய்திகள்

பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை- புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டது பென்டகன் + "||" + Pentagon releases video, photos of Baghdadi raid

பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை- புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டது பென்டகன்

பாக்தாதிக்கு எதிரான நடவடிக்கை- புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டது பென்டகன்
பாக்தாதிக்கு எதிராக அமெரிக்க சிறப்பு படையினர் நடத்திய தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாஷிங்டன்,

 சிரியா நாட்டின் வடமேற்கு பகுதியில் இட்லிப் என்ற இடத்தில் உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க  தலைவர்  அல் பாக்தாதி தங்கி இருப்பதாக அமெரிக்க படைகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இந்த கட்டிடத்திற்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க படையினர் தாக்குதல் நடத்தினர்.

அமெரிக்க படையினருடன் கொண்டு செல்லப்பட்ட நாய்களால் துரத்தப்பட்ட அல் பாக்தாதி,  அங்கிருந்து வெளியேற வழி இல்லாத நிலையில், தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் அவர் உடல் சிதறி பலியானார். 

அல் பாக்தாதி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பென்டகன் வெளியிட்டுள்ளது.பாக்தாதி பதுங்கியிருந்த கட்டிடத்திற்குள் அமெரிக்காவின் சிறப்பு படையினர் செல்வது போன்ற காட்சிகள் மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.