ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷூரி அரண்மனையில் தீ விபத்து


ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஷூரி அரண்மனையில் தீ விபத்து
x
தினத்தந்தி 31 Oct 2019 9:49 AM GMT (Updated: 31 Oct 2019 9:49 AM GMT)

ஜப்பானின் 600 ஆண்டுகள் பழமையானதும் உலக பாரம்பரியத்தைக் கொண்டதும் அந்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டு வந்ததுமான ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ,

தெற்கு ஜப்பானில் ஒகினாவா தீவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஷூரி அரண்மனை உள்ளது. ரியுக்யு வம்சத்தினரால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, கடந்த 1933 ஆம் ஆண்டு ஜப்பானின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஷூரி அரண்மனை  யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை இந்த அரண்மனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

பிரதான அரண்மனையில் ஏற்பட்ட தீயானது முக்கிய கட்டமைப்புகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அரண்மனையின் முக்கிய பகுதிகள் மற்றும் சுவர் ஓவியங்கள் கடும் சேதமடைந்ததன.

இத்தீவிபத்தில் உயிர்ச்சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. அருகில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

தீயணைப்பு குழுவினர் பல மணிநேரம் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இதற்கு முன் ரியுக்யு வம்சத்தின் போதும், இரண்டாம் உலகப் போரில் ஓகினாவா போரின் போதும் ஷூரி அரண்மனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story