உலக செய்திகள்

நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம் + "||" + FOUR ASTRONAUTS WILL STAY ON THE MOON FOR TWO WEEKS

நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்

நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த நாசா திட்டம்
2024 ஆம் ஆண்டுக்குள், நிலவில் 4 விஞ்ஞானிகளை 2 வாரத்திற்கு தங்க வைத்து ஆராய்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது.
வாஷிங்டன்,

2024ஆம் ஆண்டில் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள நாசா முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக புதன் கிழமை நடந்த ஆண்டுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது நிலவு ஆராய்ச்சி பகுப்பாய்வுக் குழுவை சேர்ந்த  ஜான் கொனொல்லி மற்றும் நிகி வெர்கீசர் ஆகியோர் பேசும்போது,  2024ஆம் ஆண்டு செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் படி 2 வீரர்கள், ஆறரை நாட்கள் நிலவில் தங்கி ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் விண்வெளி வீரர்கள் சந்திரனின் மேற்பரப்பில் இருக்கும்போது நான்கு விண்வெளிப்பாதைகளை நடத்தக்கூடும் என்றும் கூறினார்.

நிலவில் தண்ணீர் தொடர்பாகவும், இதர அறிவியல் ஆராய்ச்சிகளையும் அந்த வீரர்கள் மேற்கொள்வர் என குழுவினர் கூறியுள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் 4 வீரர்களை நிலவுக்கு அனுப்பி 14 நாட்கள் வரை அவர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் அந்தக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் கண்டறிந்த ஒரு புதிய ஆக்சிஜன் மர்மம்
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஆக்சிஜன் மர்மத்தைக் கண்டறிந்துள்ளது.
2. நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.