இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆடைகள் இல்லாத சக்கரவர்த்தி போலத்தான்- அமெரிக்க ஆய்வில் தகவல்


இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆடைகள் இல்லாத சக்கரவர்த்தி போலத்தான்- அமெரிக்க ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2019 6:31 AM GMT (Updated: 1 Nov 2019 12:06 PM GMT)

இந்தியாவின் வளர்ச்சி சாதகமானது அல்ல என்று அமெரிக்காவின் ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்

உலகளாவிய வளர்ச்சிக்கான மையம் என்ற அமைப்பின் ஆய்வாளர்கள் ஜூலியன் டுகன், மற்றும் ஜஸ்டின் சன்டோபுர் ஆகியோர் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு நடத்தினர். அவர்கள் ஆய்வில் இந்தியாவின் வளர்ச்சி குறித்த தகவல்கள் எதிர்பாராத விதமாக மிகவும் மோசமான நிலையையே காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு முக்கிய குறியீடுகள் பொருளாதார மந்த நிலையை மட்டுமல்ல, சரிவையே காட்டுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எண்ணெய் பொருட்கள் அல்லாத ஏற்றுமதி, உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான பொருள் உற்பத்தி போன்றவை மிகுந்த பின்னடைவை அடைந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மற்ற துறைகளின் வளர்ச்சியும் உலக வங்கி சுட்டிக்காட்டும் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பற்பசை விற்பனை மந்தமாகியுள்ளது. கார்களின் விற்பனை 11 மாதங்களாக சரிந்து வருகிறது. உள்ளாடை விற்பனைகளில் கூட சரிவு இருக்கிறது என்று அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆடைகள் இல்லாத சக்கரவர்த்தி போலத்தான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story