பிலிப்பைன்சில் லாரி கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி


பிலிப்பைன்சில் லாரி  கவிழ்ந்து விபத்து 19 பேர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2019 1:37 PM IST (Updated: 1 Nov 2019 1:37 PM IST)
t-max-icont-min-icon

பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.

மணிலா,

பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள  அபாயோ மாகாணம், மலைப்பாங்கான பகுதி.அந்த மலைபகுதியில் அபாயகரமான வழுக்கும் சாலைகள், வளைவுகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளும் உள்ளன.

அங்குள்ள கானர் நகருக்கு லாரி ஒன்று  நேற்று இரவு 7 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் அரசிடம் இருந்து உதவித்தொகை மற்றும் வேளாண்மைக்கு விதைகள் பெற்றுக்கொண்ட சுமார் 50 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமாக  முதியவர்களே பயணம் செய்தனர்.

அந்த சாலைகள் வழுக்கும் தன்மை உடையதால் எதிர்பாராதவிதமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Next Story