காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்


காஷ்மீர் பிரச்சினை: இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Nov 2019 7:08 PM GMT (Updated: 1 Nov 2019 7:08 PM GMT)

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தானுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நியூயார்க்,

காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக நேற்று முன்தினம் பிரிக்கப்பட்டது. ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸின் துணை செய்தித்தொடர்பாளர் பர்ஹான் ஹக் பேட்டி அளித்தபோது, இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளரின் கருத்தை நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு பர்ஹான் ஹக் கூறியதாவது:-

காஷ்மீர் நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளார். இந்திய, பாகிஸ்தான் பிரதிநிதிகளை அழைத்து பேசியுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளுமாறும், மனித உரிமைகளுக்கு முழு மரியாதை அளிக்குமாறும் அவர் இரு நாடுகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story