கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்; 7 பேர் மாயம்


கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்; 7 பேர் மாயம்
x
தினத்தந்தி 1 Nov 2019 10:15 PM GMT (Updated: 1 Nov 2019 10:15 PM GMT)

கடலில் நொறுங்கி விழுந்த ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் மாயகினர்.

டோக்கியோ,

தென்கொரியாவில் இருந்து காயமடைந்த ஒருவர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த ஹெலிகாப்டரில் மீட்பு படையினர் 5 பேரும், காயமடைந்தவரின் நண்பர் ஒருவரும் இருந்தனர்.

இந்த நிலையில் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டது. ஜப்பானின் டகேஷிமா தீவுக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த ஹெலிகாப்டர் கடலில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 7 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும்பணியில் மீட்புபடையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்த இடம் சர்ச்சைக்குரிய பகுதியாகும். அந்த தீவுப்பகுதிக்கு ‘டகேஷிமா’ என பெயர் வைத்து ஜப்பானும், ‘டாக்டோ’ என பெயர் வைத்து தென்கொரியாவும் சொந்தம் கொண்டாடிவருவது குறிப்பிடத்தக்கது.

Next Story