உலக செய்திகள்

2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீரை பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு - மத்திய அரசு பதிலடி + "||" + China opposes partition of Kashmir into 2 union territories - Central government retaliation

2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீரை பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு - மத்திய அரசு பதிலடி

2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீரை பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு - மத்திய அரசு பதிலடி
2 யூனியன் பிரதேசங்களாக காஷ்மீரை பிரித்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
பீஜிங்,

காஷ்மீர் மாநிலம் நேற்று முன்தினம் முதல் 2 யூனியன் பிரதேசங்களாக செயல்பட தொடங்கி உள்ளது. இந்த பிரிவினைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கெங் ஷூவாங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களை இந்திய அரசு முறைப்படி அறிவித்து உள்ளது. அவற்றில் சீனாவின் பகுதிகளும் அடங்கியுள்ளன. இதை சீனா கண்டிப்பதுடன், எதிர்க்கவும் செய்கிறது. சீனாவின் இறையாண்மைக்கு எதிராக இந்தியா தனது உள்நாட்டு சட்டங்களை தன்னிச்சையாக திருத்தி உள்ளது’ என்று கூறினார்.


இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும், எந்தவகையிலும் செல்லாது எனவும் கூறிய கெங், இதன் மூலம் சீனாவின் உண்மையான கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.

சீனாவின் இந்த அதிருப்திக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது. காஷ்மீர் மறுசீரமைப்பு (சிறப்பு அந்தஸ்து நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசங்களாக பிரித்தல்) நடவடிக்கை அனைத்தும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில் பிற நாடுகளின் கருத்துகள் எதுவும் தேவையில்லை எனவும் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார். லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசங்களில் தொடர்ந்து சீனா ஆக்கிரமித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.