உலக செய்திகள்

அமெரிக்க ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்- தகுதி நீக்க தீர்மானம் குறித்து டிரம்ப் கருத்து + "||" + Impeachment move by Democrats an attack on American democracy: Trump

அமெரிக்க ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்- தகுதி நீக்க தீர்மானம் குறித்து டிரம்ப் கருத்து

அமெரிக்க ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்- தகுதி நீக்க தீர்மானம் குறித்து டிரம்ப் கருத்து
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்குவது தொடர்பான நடைமுறைகளை தொடங்கும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் அவையில் நிறைவேறியுள்ளது, டிரம்பின் பதவி நீக்கம் தொடர்பான விசாரணை படிப்படியாக எப்படி வெளிப்படையாகும் என்பது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 

232-196 வாக்குகள்  என்ற அடிப்படையில் டிரம்பிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  நாடாளுமன்ற விசாரணையில் டிரம்பின் வழக்கறிஞர்களின் உரிமைகளை வழங்குவதற்கு சரியான நடைமுறைகளையும் இந்த தீர்மானம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  தனக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்வினையாற்றியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்,  தேர்தலை கவிழ்க்க அவர்கள் சதி செய்து வருகின்றனர். நேற்று  ஜனநாயக கட்சியினர் அளித்த வாக்குகள் ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்.  ஆனால்,  குடியரசுக்கட்சியினர் மிகவும் உறுதியாக உள்ளனர். இதுவரை நான் பார்த்திராத அளவுக்கு வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளனர்” என்றார்

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு ,காஷ்மீர் விவகாரங்கள் குறித்து மோடியுடன் டிரம்ப் பேசுவார் -அமெரிக்க அதிகாரி
இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் காஷ்மீர் விவகாரங்கள் குறித்து மொடியுடன் டிரம்ப் பேசுவார் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.
2. அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் இளம் ‘ராப்’ பாடகர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
3. அமெரிக்காவில் தீயில் இருந்து குடும்பத்தினர் 7 பேரை காப்பாற்றிய சிறுவன்
அமெரிக்காவில் 5 வயது சிறுவன் தனது குடும்ப உறுப்பினர்களை தீவிபத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
4. டிரம்ப்பின் 3 மணி நேர குஜராத் பயணத்திற்கு ரூ.100 கோடி செலவு
டிரம்ப் வருகையையொட்டி 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து அகமதபாத் நகரை அழகுப்படுத்தியும், சாலைகள் சீரமைக்கப்பட்டும் வருகின்றன.
5. அமெரிக்க ஜனாதிபதி வருகை: டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் - சிவ சேனா
அமெரிக்க ஜனாதிபதி வருகையின் போது டிரம்ப் அனுப்பிய பாகற்காயை மோடி ஒரு இனிப்பாக மாற்றுவார் என முன்னாள் கூட்டாளி சிவ சேனா கூறி உள்ளது.