உலக செய்திகள்

எஞ்சிய ஜூஸுக்கு ஆசைப்பட்டு பாட்டிலில் நாக்கை விட்ட சிறுவன் எடுக்க முடியமால் திணறிய பரிதாபம்! + "||" + The Brilliant Hack Doctors Used to Free a Kid's Tongue from a Bottle

எஞ்சிய ஜூஸுக்கு ஆசைப்பட்டு பாட்டிலில் நாக்கை விட்ட சிறுவன் எடுக்க முடியமால் திணறிய பரிதாபம்!

எஞ்சிய ஜூஸுக்கு ஆசைப்பட்டு பாட்டிலில் நாக்கை விட்ட சிறுவன் எடுக்க முடியமால் திணறிய பரிதாபம்!
ஜெர்மனியில் பாட்டிலில் எஞ்சிய ஜூஸை குடிக்க ஆசைப்பட்டு அதன் உள்ளே நாக்கை விட்ட சிறுவனுக்கு பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெர்லின்,

ஜெர்மனியில் உள்ள ஹானோவர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த சில நாட்களுக்கு முன் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஜூஸ் ஒன்றை வாங்கி, ஆசையாகக் குடித்துள்ளான். இதில் சில துளிகள் கடைசியாக பாட்டிலின் அடியில் தங்கியதாகக் கூறப்படுகிறது. அதனையும் நாவால் நக்கி குடிக்க தீர்மானித்த சிறுவன் பாட்டிலை கவிழ்த்து பிடித்தபடி பாட்டிலின் உள்ளே தனது நாக்கை செலுத்தி சுழற்றி குடித்துள்ளான்.

நாக்கை ஓவராகச் சுற்றியதில் அது பாட்டிலின் உள்ளேயே திருகிய நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டது. ஜூஸையும் விழுங்க முடியாமல் நாக்கையும் வெளியே எடுக்க முடியாமல் சிறுவன் திணறினான்.  உடனடியாக அவனது பெற்றோர் அருகில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்து சேர்த்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், பாட்டிலின் அடிமுனை வழியே அதிக அழுத்தம் கொண்ட காற்றை செலுத்தியுள்ளனர். இதில் சிறுவனின் நாக்கு விடுபட்டது. பிறகு சிறுவனுக்கு டாக்டர்கள் அறிவுரை கூறி  அனுப்பி வைத்தனர்.