அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ரூர்கி வாபஸ்


அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் - ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ரூர்கி வாபஸ்
x
தினத்தந்தி 2 Nov 2019 11:00 PM GMT (Updated: 2 Nov 2019 8:06 PM GMT)

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து ரூர்கி வாபஸ் பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட பலத்த போட்டி நிலவுகிறது. முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென், முன்னாள் எம்.பி. பெடோ ஓ ரூர்கி, இந்திய வம்சாவளி பெண் எம்.பி.க்கள் துளசி கப்போர்டு, கமலா ஹாரிஸ் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் களத்தில் இருந்தனர்.

இந்த போட்டியில் இருந்து பெடோ ஓ ரூர்கி திடீரென விலகி விட்டார். இதை அவர் டுவிட்டரில் அறிவித்துள்ளார். இவர் தனது பிரசாரத்தையும் நிறுத்தி விட்டார்.

இதுபற்றி ரூர்கி டுவிட்டரில், “நான் நாட்டுக்கான எனது சேவையில் வேட்பாளர் ஆக இருக்க மாட்டேன் என அறிவிக்கிறேன். இது எனது பிரசாரத்தின் முடிவாக இருந்தாலும், போட்டியின் நடுவில் நாம் நிற்கிறோம். இதில் கட்சியின் இறுதி வேட்பாளரை ஆதரிப்பேன். இதையே நீங்கள் ஒவ்வொருவரும் செய்ய ஊக்குவிப்பேன்” என கூறி உள்ளார்.

பேட்டி ஒன்றில் இவர் டிரம்பின் ஆட்சிக்காலத்தை, ஜெர்மனியின் நாஜிக்கள் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டுக்கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளானது நினைவுகூரத்தக்கது.


Next Story