உலக செய்திகள்

ரஷியாவில் பயங்கரம்: எண்ணெய் கப்பலில் வெடி விபத்து - 2 பேர் பலி + "||" + Terror in Russia: Explosion in oil ship kills 2 people

ரஷியாவில் பயங்கரம்: எண்ணெய் கப்பலில் வெடி விபத்து - 2 பேர் பலி

ரஷியாவில் பயங்கரம்: எண்ணெய் கப்பலில் வெடி விபத்து - 2 பேர் பலி
ரஷியாவில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் பலியாகினர்.
மாஸ்கோ,

ரஷியாவின் நகோட்கா துறைமுகத்தில் 4-வது முனையத்தில் ஜாலிவ் அமெரிக்கா என்ற எண்ணெய் கப்பலில் நேற்று காலை எரிவாயு மற்றும் வாயு கலவை பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. மாலுமிகள் அலறினர். இந்த வெடிவிபத்தில் 3 மாலுமிகள் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் 2 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. எஞ்சிய ஒருவர் ஆழ்கடலுக்குள் போய்விட்டார். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் பல கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.


இந்த தகவல்களை மத்திய கடல் மற்றும் நதி போக்குவரத்து செய்தி தொடர்பாளர், ‘ஸ்புட்னிக்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷியாவில் கொரோனா வைரசா? ரெயில் பயணிகளிடம் பீதியை கிளப்பிய வாலிபர்
ரஷியாவில் வாலிபர் ஒருவர் ரெயிலில் கொரோனா வைரசால் சுருண்டு விழுவது போல் நடித்து பயணிகளிடையே பீதியை கிளப்பினார்.
2. ரஷியாவின் கிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.6 புள்ளிகளாக பதிவு
ரஷியாவின் கிழக்கு பகுதியில் உள்ள காம்சட்கா தீபகற்பத்தில் உள்ள மில்கோவோ நகரில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. ரஷியாவில் வெந்நீர் குழாய் வெடித்து 5 பேர் பலி
ரஷியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் வெந்நீர் குழாய் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
4. பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்து: பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் - முதல்-மந்திரி அறிவிப்பு
பொய்சர் ரசாயன ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
5. ரஷியாவில் எரிவாயு வயலில் தீ விபத்து - 2 பேர் பலி
ரஷியாவில் யாமல் தீபகற்ப பகுதியில் உள்ள எரிவாயு வயலில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியாகினர்.