உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி + "||" + Terrorists attack army checkpoint in Afghanistan - 4 soldiers killed

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 4 ராணுவ வீரர்கள் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ சோதனைசாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர்.

* ஆப்கானிஸ்தானின் பதக் ஷான் மாகாணத்தில் நசாய் மாவட்டத்தில் உள்ள ராணுவ சோதனைசாவடி மீது நேற்று முன்தினம் மாலை தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலில் 4 ராணுவ வீரர்கள், 8 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.


* ஈரான் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதை தொடர்ந்து அவ்விரு நாடுகள் இடையே விரோதப்போக்கு நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பே இல்லை என்று ஈரான் மத தலைவர் அயத்துல்லா அலி காமேனி உறுதிபட தெரிவித்துள்ளார்.

* வங்காளதேசத்தில், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ், கிரமீன் கம்யூனிகேசன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் ஊழியர்கள் 3 பேரை பணி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் அவருக்கு டாக்கா தொழிலாளர் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

* ஹாங்காங்கில் நடந்து வரும் போராட்டத்தில் சீன அரசின் செய்தி நிறுவனம் தாக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஹாங்காங் பத்திரிகையாளர் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

* ரஷிய விண்வெளி வீரர் செர்கெய் கிரிகாலெவ்விற்கு ஜப்பான் அரசு ‘ரைசிங் சன்’ என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு: 9 பேர் உடல் சிதறி பலி
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் சிக்கி 9 பேர் உடல் சிதறி பலியாகினர்.
2. ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல்: 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியாகினர்.
3. ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு
ஆப்கானிஸ்தானில் படை குறைப்பு செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
4. ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தானில் 900 தலீபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 11 பேர் சாவு - மற்றொரு தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர். மற்றொரு தாக்குதலில் போலீஸ் அதிகாரிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்.