உலக செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் - விண்கலத்தில் பயணம் + "||" + International Space Station Cooking Equipment - Spacecraft Travel

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் - விண்கலத்தில் பயணம்

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனம் - விண்கலத்தில் பயணம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சமையல் சாதனங்கள் விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாஷிங்டன்,

அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இந்த விண்வெளி நிலையத்தில் வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுப்பணியை கவனிக்கின்றனர்.


அவர்கள் பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட்கள் தயாரித்து சாப்பிடுவதற்கான மாவு, ‘மைக்ரோவேவ் அவன்’ (அதிநவீன சமையல் சாதனம்) ஆகியவை அமெரிக்காவின் வெர்ஜீனியா வாலப்ஸ் தீவில் இருந்து சைக்னஸ் என்ற விண்கலத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) அந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்று அடைகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ள வீரர்கள் முதன்முதலாக அங்கு ‘மைக்ரோவேவ் அவன்’ பயன்படுத்தி பிஸ்கெட், சாக்லேட் போன்ற உணவுப்பொருட் களை தயாரித்து சுவைக்கப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் ஸ்போர்ட்ஸ் கார் பாகங்களும் சைக்னஸ் விண்கலத்தின்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஸ்போர்ட்ஸ் காரில் பயன்படுத்தக்கூடிய கார்பன் இழைகள், விண்வெளியில் எத்தகைய தாக்கத்துக்கு ஆளாகிறது என்று ஆராயப்படும்.

அத்துடன் அந்த விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான கருவிகள் சிலவும் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் அனுப்பப்பட்டுள்ள துகள் இயற்பியல் மானியை விண்வெளி வீரர்கள், விண்வெளி நிலையத்தை விட்டு வெளியே வந்து, விண்வெளியில் நடந்து பொருத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.